இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/30/2015

இஸ்லாமியப் பாலர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவிக் கரம் நீட்டுவீர்!

-K.M.faiz-
அன்பின் இஸ்லாமியச் சகோதரர்களே! இப் புனித ரமழான் மாதத்தில் அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலையான தர்மத்தைப் புரிவதற்கு முன்வாருங்கள்.

அநுராதபுரம் மாவட்டத்தில் கலாவெவ எனும் அழகிய கிராமம்இ முஸ்லிம்கள் அதிகம் செரிந்து வாழும் ஒரு பிரதேசமாகும். 


அரச பாடசாலைகளில் கடந்த சில வருடங்களாக ஆசிரியர்களாகப் பணிபுரிந்த நாம்இ பாடசாலைச் சூழல்இ மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் ஒழுக்க வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது என்பதையும்இ இந்த நிலையை மாற்றுவது மிகக் கடினமான காரியம் என்பதையும் அனுபவ ரீதியாக உணர்ந்து ஆசிரியத் தொழிலிலிருந்து நீங்கி தஃவா இயக்கமொன்றில் பணி புரிந்தோம். 


இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாத்துக்காகப் பணிபுரிவதற்குப் பதிலாக இன்று இஸ்லாத்தை வைத்து இயக்க வெறியை ஊட்டவும்இ அதனை வழி நடத்துகிறவர்களைப் போசிக்கவுமே பயன்படுகிறது. அங்கும் நல்லவர்களுக்குக் காய்வெட்டும் அரசியல் தான் நடக்கிறது. 


தஃவாக் களத்தில் செயற்படும் சிலர் மார்க்கத்தின் போதனைகளை மக்களுக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பதை திட்டமிடுவதற்குப் பதிலாக தன் இயக்கத்தை முதன்மைப்படுத்தவும்இ மற்ற இயக்கத்தவரை எவ்வாறு வீழ்த்தலாம் என்றும் உலக முஸ்லிம்களை எவ்வாறு முஷ்ரிக்குகளாக்கலாம் என்றும் திட்டமிடும் காட்சிகளைக் கண் கூடாகக் கண்டோம்.


அதன் பின்னர் அதிலிருந்தும் நீங்கி அல்லாஹ் எமக்கு வழங்கிய கல்வி எனும் அமானிதத்தைப் பாதுகாத்து நாளைய உலகில் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்துஇ சமதாயத்தை வழி நடத்தும் சிறந்த தலைவர்களை உருவாக்கும் உன்னத நோக்கத்தின்  ஒரு முயற்சியாகக் கல்வி நிலையமொன்றைப் பாலர் பாடசாலையிலிருந்து ஆரம்பித்தோம்.


இவ்வருடம் ஜனவரியில் முற்றுமுழுதாக இஸ்லாமியச் சூழலில் ஆங்கில மொழியில் பிரதானமாகவும் அறபுஇ தமிழ்இ சிங்களம் என்பன துணை மொழிகளாகவும் கொண்டு வாடகைக் கட்டடத்தில் துவங்கப்பட்ட அல் இஹ்லாஸ் சர்வதேச இஸ்லாமியப் பாலர் பாடசாலைக்கு 40 விண்ணப்பங்கள் கிடைத்த போதும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் என்பதால் தற்போது 23 மாணவர்கள் கல்வி பயிலுகிறார்கள். அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


அல் இஹ்லாஸ் சர்வதேச இஸ்லாமியப் பாலர் பாடசாலையில் காணப்படும் சிறப்பியல்புகள் வருமாறு


•         மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் தொகை.


•         3 வயதிலேயே நாம் பாலர்களைச் சேர்த்துக் கொள்ளுதல்.


•         23 மாணவர்களுக்கு 4 மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற 4 ஆசிரியைகள்இ ஓர் உதவியாளர்இ ஓர் அதிபர் உட்பட மொத்தமாக ஆறு பேர் பணிபுரிதல்.


•         தினசரி
Multimedia Projector மூலம் பாலர் பாடல்கள், கதைகள், எமுத்துக்கள்இ கிராஅத் போன்ற வீடியோக் காட்சிகளும் வாரம் ஒரு தலைப்பில் Multimedia Presentation களும்.

•         தனித்தனிக் கணினிகளில் ஒவ்வொரு வாரமும் 3 வயதிலிருந்தே பாலர்களுக்கான கணினிப் பயிற்சி. 


•         எழுத்துப்பயிற்சிக்காக
Kids’ Choice எனும் 4 மொழி மாதச் சஞ்சிகை வெளியிடப்படுகிறது. இச் சஞ்சிகை மேலும் சுமார் 30 முஸ்லிம் முன்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

•         புத்தி ஜீவிகளைக் கொண்ட முகாமைத்துவக் குழுவினால் முகாமைத்துவம் செய்யப்படுவதும்  ஆலோசனை சபையொன்று செயற்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


மேலும் கல்விச் சுற்றுலாஇ பாலர் சந்தைஇ கண்காட்சிஇ விளையாட்டுப் போட்டிஇ கலைவிழா என்பவற்றோடு (அல் ஹம்துலில்லாஹ்)இ அல்லாஹ்வின் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்று எமது பிரதேசத்தில் அதிக வரவேற்பைப் பெற்றதாலும் பிரதேசப் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளாலும் ஆங்கில மொழி மூலக் கல்வியில் பெற்றோர் அதிக விருப்புக் கொள்வதாலும் இஸ்லாமியச் சூழலில் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதாலும் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஜனவரிக்கு அல் இஹ்லாஸ் சர்வதேச இஸ்லாமியப் பாடசாலையில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்கி  தரமுயர்த்தவுள்ளோம்.


அதற்காகப் பொருத்தமான காணியொன்று 120 பேர்ச்சஸ் பரப்பளவில் கட்டடமொன்றுடன் கொள்வனவு செய்வதற்காக கடன் மற்றும் நன்டகொடைகளுடன் 500 000.00 ரூபாய்கள் முற்பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்துள்ளொம்.. காணியின் மொத்த விலை 64 50 000.00 ரூபாய்கள். மீதிப் பணத்தை (59 50 000.00) இன்னும் சில மாதங்களில் (டிசம்பருக்குள்) வழங்கியாக வேண்டும். 


எனவே நல்லுள்ளம் கொண்ட இஸ்லாமியச் சகோதரர்களிடமிருந்து இதற்காக உதவி கோரப்படுகிறது.


எமது பாலர்களின் எதிகாலத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்து நாளைய சமுதாயத்தில் ஏற்பட இருக்கின்ற பாரிய நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்து எமது சமூகத்தை கட்டிக் காக்கக் கூடிய பெருந் தலைவர்களை உருவாக்கும் முயற்சியின் ஆரம்பம் இது. எனவே இப் புனித ரமழானில் இதற்காக தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளைச் செய்வதற்கு முன்வாருங்கள். ஸகாத்திலிருந்தோஇ நன்கைாடையாகவோஇ மாதச் சந்தாவாகவோ முடியுமான வகையில் உதவுங்கள். அல்லது ரூ. 500.00 பெறுமதியான டிக்கட் வழங்கப்படுகிறது. அதனைப் பெற்றுக் கொள்ளலாம். நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அல்லாஹ் எமது முயற்சிகளுக்கு நிறைவான பலனையும் மறுமையில் அதற்கான கூலியைப் பன்மடங்காகப் பெருக்கியும் தருவானாக!


அல் இஹ்லாஸ் சர்வதேச இஸ்லாமியப் பாடசாலையின் இலக்குஇ பணிக் கூற்றுஇ பாடத்திட்டம்இ பாடசாலை நேரம்இ தினசரி செயற்பாடுகள்இ வரையறைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு முழுமையான செயற்றிட்டத்தைப் படிக்கவும்.



Director,
K.M.faiz
071 5613133, 076 7161399

Kafardeen Mohamed Faiz
People’s bank – Kekirawa branch
Acc.Number: 0422 0017 0000 103​ 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா