பட்டதாரி பயிலுநர் நியமனத்தின்போது 2005ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு காலப் பகுதிக்குள் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த சகல பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பினை மேற்கொண்டு 2011ம் ஆண்டு பரீட்சையில் தேற்றியிருந்தபோதிலும் துரதிஸ்டவசமாக இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகி வெளிவந்த பட்டதாரிகளுக்கு இந்நியமனம் வழங்கப்படவில்லை. இப்பட்டதாரிகளின் பட்டம் செல்லுபடியாகும் திகதி 31 டிசம்பர் 2011 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 90 பட்டதாரிகளையும் அம்பாறை மாவட்டத்தின் விடுபட்ட பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி மகஜர் ஒன்றினை அம்பாறை மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒனறியத்தின் சார்பில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தனவிடம் கையளித்து குறித்த நியமனம் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட பட்டதாரி மணவர்களின் குழு ஒன்றினை கொழும்பிற்கு அழைத்துச்சென்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருடனும் கலந்துரையாடுவதற்கு உள்ளதாக முதல்வர் இதன்போது தெரிவித்தார்
0 comments:
Post a Comment