(ஹனீபா)
கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி தீக்கிரையாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வினாயக புரம் சமுர்த்தி வங்கி நேற்று முந்தினம் (07) வாடிக்கையாளர்களின் நலன் கருதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தீக்கிரையாக்கப்பட்ட நடவடிக்கையில் சம்மந்தப்பட்டவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்த கடமையாற்றிய வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் காசாளர் இருவரும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சமூர்த்தி அதிகார சபையின் வங்கி நிதி நடவடிக்கை பிரிவின் கணக்காய்வுப் பிரிவு மற்றும் மேற்பார்வை அலகு என்பவற்றின் பணிப்புரைக்கு அமைவாக அம்பாறை மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக அம்பாறை மாவட்ட உள்ளக கணக்காய்வு அதிகாரிகளினதும்; மற்றும் அம்பாறை மாவட்ட வங்கி மகாசங்க மேற்பார்வை அதிகாரிகளிதும் துரித நடவடிக்கையினை அடுத்து மக்களுக்கு சமர்த்தி வங்கியின் செவையினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் இவ்வங்கி திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த வங்கியின் ஆளணிகள் அனைவரும் புதியவர்களாக ஏனைய வங்கிகளில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
வங்கி தீக்கிரையாக்கப்பட்ட விடயம் தொடர்பான ஆய்வுகள,பரிசீலனைகள்; தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்


0 comments:
Post a Comment