காதல் தோல்வியால் கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த ரயிலின் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சேர்ந்த விஜி சிரான் (வயது20) என்ற இளைஞன் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
காதலில் தோல்வியடைந்ததினாலேயே இவர் தற்கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment