இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/18/2013

முப்பெரும் விழா

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம், உள்ளுராட்சி கிராம அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சு, பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் இணைந்து நடாத்திய முப்பெரும் விழா (16) சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெற்றது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை செயலாற்றுப் பணிப்பாளர் ஏ.எல்.இப்றாகீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் கிழக்கு மாகாண சுகாதாரஇ சுதேச வைத்தியஇ சமூகசேவைகள்இ சிறுவர் நன்நடத்தைஇ கூட்டுறவுஇ விளையாட்டுஇ தொழில் நூட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்இ மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்இ முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்இ கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் பொன். செல்வநாயகம்இ பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் பாலர் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கல்இ பயிற்சியை முடித்துக் கொண்ட பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு வழிகாட்டல் கைநூல்கள் வழங்கல்இ சாதனையாளர்களைக் கௌரவித்தல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.தமிழ்இ முஸ்லிம்இ சிங்கள பாலர்களின் கண்கவர் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இங்கு உரையாற்றிய முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீட் ' இதுவரை காலமும் கிழக்கு மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒரு முறையான வழிகாட்டி நூல் இருக்கவில்லை.

சிறந்த பயிற்சிகள் இருக்கவில்லை. ஆனால் இன்று அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணம் முழுவதற்குமான ஒரே வழிகாட்டியை அறிமுகம் செய்துள்ளோம்.

இனி இவ்வாசிரியர்களிடம் பயிற்றுவிக்கப்படும் சிறுவர்கள் இந்த நாட்டின் சிறந்த பிரஜையாகஇ சிறந்த கல்விமான்களாகஇ எங்களை வழிநடத்தக் கூடிய நல்லவர்களாகஇ வல்லவர்களாக வருவார்கள் என்பதில் ஐயமில்லை' எனத் தெரிவித்தார்.

மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் உரை நிகழ்துகையில் ' கிழக்கு மாகாணத்தில் 3000 பாலர் பாடசாலை ஆசிரியைகள் இருக்கின்றனர். அவர்களின் தியாகங்களுக்கு விலை பேச முடியாது.

ஆனால்இ அவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக மாதமொன்றுக்கு ஒருவருக்கு 3000ரூபாவாவது வழங்க வேண்டும் என எமது முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இவ்வாறு ஒருவருக்கு மாதம் 3000ரூபா வழங்க வேண்டுமென்றாலும் 90இ00இ000ரூபாய் பணம் தேவையாகவுள்ளது. எனவேஇ இவ்வருடத்திலிருந்து எமது சபை ரூபாய் ஒரு கோடியை இவ்வாசிரியர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்குவதற்குஒதுக்கீடு செய்ய வேண்டுமென எமது முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.





»»  read more

11/29/2013

கல்முனை தனியார் பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் நிர்மானிப்பதற்கு இணக்கம்

-ஹனீபா
கொய்க்கா திட்டத்தின் இரண்டு கோடி ரூபா செலவில் கல்முனை தனியார் பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் நிர்மானிப்பதற்கு கொய்க்காவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பார்க் சூக் இணக்கம் தெரிவித்தள்ளார்.

ஆசிய மன்றத்தின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லீம் காங்கிரஸ் குழுத்தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இடம் பெற்ற சந்திப்பின்போதே இவ் அபிவிருத்திக்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள கொரிய நாட்டு தூதரகத்தில் அமைந்துள்ள கொய்க்கா தலைமை அலுவலகத்தில் நேற்று முந்தினம் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கிழக்க மாகாண முதலமைச்சர் நஜீப் அப்தல் மஜீட், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டு கல்முனைப் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கொய்க்காவின் வதிவிடப் பிரதிநிதி இந்த ஆண்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்முனை தனியார் பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் நிர்மானிப்பதற்கு 2 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.

இதன் மூலம் பிரயாணிகளினதோ பஸ்நடத்துனர்களினதோ பயன் பாட்டுக்கு உதவாத ஒன்றாக காணப்படுகின்ற கல்முனை தனியார் பஸ் நிலையத்தை சகல வசதிகளும் கொண்டதாக அபிவிருத்தி செய்வதுடன் ஒற்றுமை சதுக்கம் எனும் பெயரில் வியாபார மற்றும் பொழுது போக்கு வசதிகளையும் ஏற்படுத்தி இரவு நேரத்திலும் கல்முனை நகரை இயங்கச் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.



»»  read more

9/19/2013

மன்னார் மக்கள் தங்களின் மீள் குடியேற்றத்தை உறுதிப்படுத்த அமைச்சர் றிசாடின் கரங்களை வட மாகாண சபைத் தேர்தலில் பலப்படுத்த வேண்டும்: நஜீப் ஏ மஜீத்

(முஹம்மட் நளீச்)
கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இப்பகுதி மக்கள் புலிகளினால் 24 மணித்தியாலத்திற்குள் வெளியேற்றப்பட்டு 'அகதி' என்ற அடையாளத்துடன் பல துன்பங்களையும், கஸ்தங்களையும் அனுபவித்து வந்ததை நாமறிவோம். தற்போது அந்த அகதி வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மீண்டும் தங்களது கிராமங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் வட மாகாண சபைத்தேர்தல் வந்துள்ளது. இத்தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் அமைச்சர் றிசாடின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தங்களின் மீள் குடியேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் என மன்னார் முசலிப் பிரதேசத்தில்நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார். 

கடந்த மூன்று தினங்களாக மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த கிழக்கு முதலமைச்சர் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி, நானாட்டான், முசலி, அச்சங்குளம்,தாறாபுரம,; சிலாவத்துறை மற்றும் பன்டாரிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.இறுதியாக முசலியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கையிலே மேற்கண்டவாறு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார்அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 

ஒரு இளம் துடிப்புள்ள சமூக ஆர்வம் கொண்ட அமைச்சர் றிசாட் பதிவுதீனை நீங்கள் அமைச்சராக பெற்றுள்ளீர்கள் எனவே, அவரின் செயற்பாடுகளுக்கு நீங்கள் பலம் சேர்க்க வேண்டும். அவர் மீள் குடியேற்றம் தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கடுமையாக உழைத்து வருகின்றார.; அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் அரசாங்கத்தின் கீழ் வன்னி மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக றிசாட் செயற்பட்ட காலத்தில் உங்களை மீள் குடியமர்த்த வேண்டும் என்று கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இன்றும் மேற்கொண்டு வருகின்றார் அவரின் முயற்சிகளை நாங்கள் ஊக்கப்படுத்தி வந்திருக்கின்றோம்.

எனவே, நடைபெறவள்ள வட மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் றிசாட் பதிவுத்தீனின் கரங்களை பலப்படுத்த வேண்டிய தார்மீக கடமை மன்னார் மாவட்ட மக்களாகிய உங்களது பொருப்பாகும். இவ்விடத்தில் ஒரு விடயத்தை நான் சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த காலத்தில் மூதூர், தோப்பூர் போன்ற பகுதிகளில் பயங்கரவாதிகளினால் எமது மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டார்கள் அப்போது அமைச்சர் றிசாட் பதிவுத்தீன் அடங்களாக நாங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு 40 நாட்களிலே அகதிகளாக்கப்பட்ட அம்மக்களைமீண்டும் குடியமர்த்தினோம். இதற்கு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். அன்று 1990 இல் நீங்கள் வெளியேற்றப்பட்ட போது அப்போதைய ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கமானது உங்களை மீள் குடியேற்றும் விடயத்தில் அலட்சியமாகவே செயற்பட்டது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

எனவே, கடந்த 23 வருடங்களுக்கு பிறகு நீங்கள் மீண்டும் உங்களது இருப்பிடங்களுக்கு திரும்பியிருக்கின்றீர்கள் என்றால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பயங்கரவாதத்தை அழித்ததனாலேயே என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, நடைபெறவுள்ள இத்தேர்தலில் நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. வெறுமனே ஏனைய அரசியல் கட்சிகளின் வார்த்தைகளை நம்பி உங்களது வாக்குகளை சிதைத்து விடாமல் அமைச்சர் றிசாதின் கைகளை பலப்படுத்தும் முயற்சிகளில் நீங்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். 

அண்மையில் கிழக்கு மாகாண சபையின் சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக வட மாகாண சபை அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தார்கள.; அவர்களிடம் அமையவுள்ள வடக்கு மாகாண சபையை உரிய முறையில் பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொண்டோம். 

வட மாகாணத்தை பாரிய அபிவிருத்தியடைந்த மாகாணமாகவும் ஏனைய மாகாணங்களுக்கு ஒரு முன்மாதிரியான மாகாணமாகவும் மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இதற்கு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆட்சியமைக்கும் கட்சியாக மாற்ற வேண்டும் அப்போதுதான் உங்களது மீள் குடியேற்றம் முழுமைபெரும் எனவே, ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆட்சியமைக்கும் கட்சியாக மாற்றுவதுடன் அமைச்சர் றிசாத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.

என அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் குறிப்பிட்டார் இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளங்கள் பிரதியமைச்சர் சரத் குமார குணவர்த்தன கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் எம். எஸ் சுihயர், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் சஹாப்தீன் மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் அடங்களாக பலர் கலந்து கொண்டனர். 

- கிழக்கு முதலமைச்சரின் ஊடகப்பிரிவு - 
»»  read more

4/12/2013

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா Photos

(எம் ரீ எம்.பர்ஹான்,ஹனீபா,சக்கி)

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 2013.04.12 சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இனைப்பாளரும், சம்மாந்துறை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ. எம். எம் நௌசாத் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் எ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டார்.  ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷhட்,வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், உதவி தவிசாளர் ஏ.கலீலுர் றஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

33 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள இந்நிர்வாகக் கட்டிடம் 4 மாடிகளை கொண்டதாக நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.

»»  read more

1/12/2013

நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலைக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் விஜயம் செய்யவுள்ளார்.

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலைக்கு எதிர்வரும் 15ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் விஜயம் செய்யவுள்ளார்.

அன்றைய தினம் இவ்வைத்திய சாலையில் நடைபெற ஏற்பாடகியள்ள வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொள்வாதற்;காகவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலையானது கடந்த 2010ஃ2011ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டியில் 'சீ' தர விருதை பெற்றுக் கொண்டதை முன்னிட்டே இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளன.

ஏதிர்வரும் செவ்வாய்கிழமை காலையில் நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலை கேட்போர் கூடத்தில் டாக்டர் எம்.பி.எம்.மாஹிர் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை சமுக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹசன் அலி, பைசால் காஸீம் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ் வைத்திய சாலை கடந்த சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக அழிவுற்று சர்வதேச தொண்ட நிறுவனம் ஒன்றின் நிதியுதவியினால் மீள் கட்டுமானம் செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது.

கடந்த வருடம் இவ்வைத்திய சாலைக்கு சுகாதார பிரதியமைச்சர் லலித்திசானாயக்க, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் சமுகமளிததுடன் இவ்வைத்திய சாலையினை ஆதார வைத்திய சாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா